Wednesday, January 4, 2012

தம்பிக்கு எந்த ஊரு - அதனால் என்ன பரவா இல்லை 1

ஜெர்சி க்கு வந்து வருஷம் ரெண்டு ஆகுது.. ஒரு செகண்ட்..
உள்ள போகுறதுக்கு முன்னாடி மக்களுக்கு ஒரு சந்தோஷமா விஷயம் சொல்ல ஆசை படுறேன்
நானும் என் மனைவியும் இந்த மாசம் ஒரு அழகான சின்ன உயிர்க்கு தாய் தகப்பன் ஆக போறோம் கடவுள் அருளால்..
என் மனைவியும் நானும் இந்தியா ல டெலிவரி வெச்சுக்க முடிவு பண்ணி போன அக்டோபர் மாசம் அவங்கள இந்தியால விட்டு நான் திரும்பி வந்துட்டேன்
ஆனா எப்படியோ இந்த விஷயம் ஆபீஸ்ல தெரிஞ்சு போச்சு எல்லாரும் துக்கம் விசாரிக்கற மாதிரி எங்க இங்க டெலிவரி வெச்சுகள அப்படின்னு நானே நொந்து போகுற அளவுக்கு எல்லாருக்கும் பதில் சொல்லியாச்சு
எல்லோரும் திரும்பி திரும்பி சொல்லுற ஒரே வார்த்தை குழந்தை இந்த ஊருல சிடிசன் ஆகிடலாம் சார் போங்க மிஸ் பண்ணிடேங்க
கொஞ்ச வருஷம் முன்னாடி பா. ராகவன் கட்டுரை ஒன்னு படிச்சேன் "நிலமெல்லாம் ரத்தம்"
அதுல பாலஸ்தின் ல ஜ்விஸ் நாடோடிகளா இருந்து எப்படி அந்த ஊரை சொந்த நாடா மாத்திகிட்டாங்க .. கேட்க கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் அவங்களோட அகதி வாழ்க்கையோட கஷ்டம் அனுபவிச்சா தான் தெரியும்
ஆனா சொந்த ஊரு இருக்கு அட்டகாசமான வரலாறு எல்லாம் இருந்தும் ஏன் ஊரு பேரு இல்லாத நாட்டுல சிடிசன்சிப் வாங்கனும்னு துடியா துடிகுறாங்க புரியல
அதுல ரொம்ப டாப்பு ஒருத்தரு சொல்லுறாரு பையனோ பொன்னோ இங்க ஈசிய வேலை கிடைச்சுரும்.. என்னால இதுக்கு மேல சிரிக்க முடில.. இருவது வருஷம் அப்புறம் அவனோ அவளோ படிச்சு அப்புறமா கிடைக்க போற வருமானத்த எதிர் பார்க்குற ஈன பிறவி பட்டாம் பூச்சிகளே உங்களுக்க நிறைய விளக்குகள் எதிரில் உள்ளன அக படாமல்பறக்க பாடுபடுங்கள் சிந்தனை அற்ற என் இனிய அடிமைகளே!!!