Saturday, January 30, 2016

தியாகத்தின் நிறம் சிகப்பு

உலகம் மாதம் ஒரு முறை பயணிக்க தொடங்கும் !!
சிறு பிராயம் முதலாக என் அம்மா என்னிடம்
இன்னைக்கு மட்டும் நீ சமையல் பண்ணிடுடா!!
நாளைக்கு அண்ணா மொத்தம் இரண்டு நாட்கள்
லீவ் எடுத்து விடுவாள் ஒன்றுமே புரியாது!!
எப்படியோ தட்டு தடுமாறி சமையல் அறிந்து விவரம் புரிந்த காலத்தில்
எதற்கு இப்படி ஒரு சடங்கு என்று தோன்றும்
யார் மீதும் படாமல் ஒதுங்கி கூனி குறுகி நிழல் படாமல் ஓடுவாள்!!
இப்போது நினைத்தால் என் மீதே எனக்கு வெறுப்பு
6 வயதில் சமையல் கரண்டி எடுத்த பொழுது எனக்கு யாரவது இதை பற்றி சொல்லி இருந்தால்
மீதம் உள்ள இரண்டு நாட்களும் அன்னை கரங்களால் அமுதுண்டு இருப்பேன் பேடிகளின் பேச்சை கேட்காமல்!!!
அந்த இரண்டு நாட்கள் அவள் தன்னை குறுக்கிக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை
எனக்கு இன்று வரை பரிட்சயம்
இதைப் பற்றி பேசும் போது அருவருப்பாகவும்
அவஸ்தையை நேரில் பார்க்கும் போது பரிதாபமாகவும் இருக்கும்
சிறு மூளைக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
அவளுக்கு உன்னுடைய அருவருப்போ பரிதாபமோ தேவை இல்லை
ஏனெனில் இந்த சிகப்பு உனக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம்
இவைதான் பின்னாளைய பிரபஞ்ச தோற்றத்தின் மூலமே
அசடே தெரியாத உனக்கு
அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே கடவுள் என்று பொருள்
இவள் உதிர்க்கும் ஒவ்வொரு உதிரமும் தியாகம் என்பதை உணராத வரை
உன்னால் அவள் வலி உணர முடியாது!
பெண்ணே எனக்கு யோனி பூஜை பற்றி தெரியாது காசியில் இன்றும் நடக்கின்றது !!
ஆனால் உறுதியிட்டு சொல்கிறேன் உன்னுடைய வயிற்று வலியும் உதிரப் போக்கும் எனக்கு என் தாயை தவிர
வேறு எதுவும் நியாபகம் வர விடுவதில்லை !! வாழ்க உனது தியாகம் 

Tuesday, January 26, 2016

சட்டப்படி ஒரு கற்பழிப்பு

ஆமாம் உன்னை பெண் பார்க்க வந்தார்களாமே
நட்சத்திரம் கேட்டார்களா??
சொன்னாயா  அந்த மூடர்களிடம் நான் தான் கோள்களின் அரசி என்று
கோள்களின் நட்சத்திரத்தை எந்த ஆரூடம் கணிக்க போகின்றது??
உன்னை பாடச் சொன்னார்களா??
ஸ்வரங்களின் மூலமான உன்னை போல் பாட சொன்னார்களா ஞான சூனியங்கள்!!
எதனை பேரின் காலில் விழுந்தாய் ??
சொன்னாயா அந்த பேடிகளிடம்
நர்த்தனம் ஆடிய கால்களும் கைகளும்
வெறும் வணக்கத்திற்கும் நமஸ்காரத்திற்கும் மட்டுமே பயனாக உள்ளது??
இவை எல்லாம் கேவலம் ஒரு ஆணிடம் இலவசமாக சோரம் போவதற்கும்
அவன் தூங்கி எழுந்து போவதற்கு முன் மொம்மை போல் சிரிப்பதற்கும்
அவன் போன பின் அணிந்த  உள்ளாடை துவைப்பதற்கும்
நான் ஒன்றும் செய்து வைத்த மெழுகு பொம்மை அல்லவே??
எத்தனை முறை இரவு களியாட்டத்திற்கு பின் காலை
நமக்கு யாரவது எடுபுடி ஏவல் செய்யமாட்டார்களா என்று ஏங்கி
நானே எழுந்து நானே குளித்து நானே சமைத்து நானே வீடு சரி செய்து
இப்படி பல நானே தனியாக செய்ததை
பகிர்ந்து கொள்ள மட்டும் வந்து விட்டாயா?
தூங்கும் போது மட்டும் நான் தனியா இருக்க அனுமதி இல்லை
போதுமடா என்னை கசக்கி பிழிந்தது
எனக்குள் இருக்கும் மிருகம் விளித்து பல வருடம் ஆகி விட்டது
ஆனால் வேடுவன் மட்டும் மாறவே இல்லை !!

Monday, January 25, 2016

வீணை வாணியே

வீணை வாணியே ஏன் இந்த ஒரு தலை பட்சம்
வீணை மீட்டும் கைககளால் என்னையும் கொஞ்சம் மீட்டக்கூடதா ?
பிரம்மன் மூன்று தலை நான்கு  கைகளை வைத்து உன்னை கொஞ்சம்
அதிகமாகத்தான் வாளித்து விட்டான்!!
உன்னை சிறை எடுத்தே தீருவது என
கலைவாணியை நோக்கி துதிக்க
என் கனவில் வந்ததோ வெறும் தாமரை மட்டுமே!!
வெற்றிலையில் மை போட்டு பார்த்தால் பிறகு தான் தெரிந்தது
கலைவாணி வீணை கற்றுக் கொள்ள வீதிக்கு வந்து விட்டால் என்று!!
நல்லதோர் வீணை செய்து அதை என்று தேய்ந்த படியே பாட்டு ஒன்று செவி வழி வந்தது !!

என்று தீருமோ இந்த தாகம்

சில   சமயம்  சிரிப்பால்!!  
சில  சமயம்  அழுவாள்!!!  
சில  சமயம்  சுள்ளென்று  சுட்டேரிப்பால்!! 
சில  சமயம்  காமப்  பார்வை  பார்ப்பாள்!!! 
சில  சமயம்  என்ன  சொல்ல  வருகின்றாள்  என்றே  தெரியாது!!  
ஆனால்  அதற்கும் தலையாட்டி  விடுவேன்!!  
சில  சமயம்  ராணி  ஜக்குபாய்  போல  மின்னுவாள்!! 
சரி  என்று  அரசியல்  பேசுவேன் சடாரென்று  வீசியடிப்பால்!!  
உங்களுக்கு  வேற  பொழப்பே   இல்லையால்  என்று!! 
சில  சமயம்  குடும்ப  சமாச்சாரம்  அளாவுவால்!!  
கொஞ்சம்  உரிமையோடு  தயங்கி  அவள்  குடும்பம்  பேசுவேன்!! 
செருப்பால்  அடிக்காத  குறையாய்   வெளியேற்றுவாள்!!!  
8 வருடம்  ஆகியும்  யார்  நீ  என்று கேட்கத் தோன்றும்!! 
இதுதான்  நான்  என்று  சொன்னால்   எனைச்சீப்போ!!  
என்று  விடுவாளோ  என்ற  பயம்  ஆட்டிப்பாக்கும்!!  
காதல்  , திருமணம் , குழந்தை , வேலை 
இவற்றுக்கு  இடையில்  ஒரு  மனப்போரட்டம் 
என்று  தீருமோ  இந்த  தாகம்!!! 

Wednesday, January 20, 2016

காலையில் எழுந்தவுடன்..

நான் பார்த்த மனிதர்களில் இரண்டே ரகம்
சிரிபவர்கள் அழுபவர்கள்
ஆக மொத்தம் ரெண்டு பேறும் ஏதோ ஒரு வகையில் தன் உடல்
மன உடல் வலிமையை இழக்கிறார்கள்
dissolution என்ற ஒரு புள்ளிக்கு யாருமே வருவதில்லை
வருத்தமும் சந்தோஷமும் இல்லாத்  தன்மை
இன்றைய சந்தோசம் நாளைய துக்கம்
நேற்றைய துக்கம் இன்றைய சந்தோசம்
இந்த சுழற்சியை புரிந்து கொண்டால்
எதுவுமே துக்கம் இல்லை
எதுவுமே மகிழ்ச்சியும் இல்லை
யாருமே நண்பர்களும் பகைவர்களும் இல்லை
அழகும் இல்லை அவலட்சணமும் இல்லை
சரியும் இல்லை தவறும் இல்லை
ஆக மொத்தம் கவலைகளை தூக்கி எறியுங்கள்
சுதந்திரமாக இருங்கள் !!!

Tuesday, January 19, 2016

Why do we Cause Germs!!

Germs are everywhere!!
We can cause it!!
Cause they are very very small
You can not see them with your eyes
Because you can not see it with a magnifier glass
Cause they are too too small
They are in your skin
in the broken skin
in your pants
if you dont wash your cloths it will cause Germs.
On the Mat Germs are in there too!!
You got to vacuum clean it because it is important
Cause we have to make this place neat and nice.

We have to broom it too!
We dont want to cause any germs!
Because its good for the place.

Monday, January 18, 2016

Plants Make their own food

Plants have lines in their leaves!
Plants have lines because the lines make sugar!
The leaves have tiny einy wieny balls
The balls makes sugar for the plants to grow!!

Believe Life to God

Believe in Teacher
Believe in God, Only then she
looks like a teacher
If you don't Believe in God
You don't believe in teacher
If you believe she drinks Pune Milk
she drink as you think.
Then she protects our house
She helps to open the door
as she has the key even you forget!!

தோடு தொங்கட்டான் ஜிமிக்கி

இந்த பெண்களுக்கு சலிப்பே வராதா!!
அடேங்கப்பா எத்தனை விதமான உடை நடை பாவனை
நண்பர்கள் உற்றார் உறவினர்!!

முன்பெல்லாம் ஒரு போட்டோ எடுக்க
நாம் கடைக்கு போவோம்
இப்போது போட்டோ நாம் விரித்த கடைக்கு வந்து விட்டது !!

ஒரு நாளைக்கு எத்தனை முறை செல்பி எடுத்தாலும்
அதே தோடு தொங்கட்டான் ஜிமிக்கிதான் மாறவே மாறாது!!
அதே பார்வை சிரிப்பு Length & Breadth  கூட மாறாது!!

என்னை பார் சிரி என்று எல்லா பார்பர் ஷாப்பிலும் தவறாமல் பார்க்கும்
கழுதை படம் அடிக்கடி என் நினைவிற்கு வரும் யாரவது செல்பி அனுப்பினால்!!

புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதையா
பொண்ணுங்க தான் இப்படின்னா இந்த ஆண் பசங்களுக்கு என்ன ஆச்சு
கருமம் எப்படி பார்த்தாலும் நம்ம மூஞ்சிய ரெண்டாவது தடவ கண்ணாடில பார்க்க சகிக்காது!!
ஆனாலும் சும்மா சும்மா செல்பி பாருன்னு க்ளோஸ் அப்ல போட்ட
கண்ணுள்ள காமாலதான் வரும்!!

அப்ப எல்லாம் போட்டோ எடுத்தா ஆயுள் குறையும்ன்னு சொல்லுவாங்க
இப்ப மொபைல்ல உள்ள கேமராவுக்கு ஆயுள் கம்மியாகிடுச்சு

இதெல்லாம் பார்த்துட்டு கோவபட்டு செல்பி எடுக்கறத விட்டுடாதீங்க
ஏதோ நான் ஒரு flow ல எழுதிட்டேன்!!
மனசுல வெச்சுக்காம உடனே சுட சுட ஒரு செல்பி எடுத்து அனுப்புங்க பார்ப்போம்!!


கலங்கரை விளக்கம்

அப்பொழுதே சொன்னேன் உன் கண்களை திறக்காதே என்று கேட்டாயா  இப்போது பார் எத்தனை  பளீர் வெளிச்சம் கலங்கரை விளக்கம் போல

கேள்விக்கு பதில் என்ன

1. உன் பெயர் - என்ன அதை சொல்ல என்ன தயக்கம் !
2.வயது  - என்ன அதை சொல்ல என்ன தயக்கம் !
3.நிறம் - முத்து  வெள்ளை  நிறம்! அதை சொல்ல என்ன தயக்கம் !
4. தேகம் - மெலிந்த உருவம் அதை சொல்ல என்ன தயக்கம் !
5. பிடித்த உணவு - நானே நானே ! அதை சொல்ல என்ன தயக்கம் !
6. பிடித்த நிறம் - இளஞ் சிவப்பு அதை சொல்ல என்ன தயக்கம் !
7. பிடித்த உறவு - அப்பா!  அம்மா! அதை சொல்ல என்ன தயக்கம் !
8 பிடிக்காத உறவு - யாரும் இல்லை! அதை சொல்ல என்ன தயக்கம் !
9 பார்த்ததில் ரசித்தது - என் முகம்! அதை சொல்ல என்ன தயக்கம் !
10 பார்க்காததில் ரசித்தது - ஏதும் இல்லை ! அதை சொல்ல என்ன தயக்கம் !
11. பிடித்த சினிமா - என் கதை! அதை சொல்ல என்ன தயக்கம் !
12.பிடிக்காத சினிமா - மக்களின் விரோதம் !அதை சொல்ல என்ன தயக்கம் !
13 ஒரே வார்த்தையில் உன்னை  விளக்க  வேண்டுமென்றால்  எப்படி சொல்வாய் ? - என் முகம் தன்னிறை விளக்கம் ! விளக்கம் வேண்டாம் ! அதை சொல்ல என்ன தயக்கம் !
14 உனக்கு நான் என்ன வேண்டும் - எல்லாமே! அதை சொல்ல என்ன தயக்கம்
14. எனக்கு நீ என்ன வேண்டும் - என்
பிம்பம் ! அதை சொல்ல என்ன தயக்கம் !
15. மிகவும் பிடித்த நபர் - கடவுள்! அதை சொல்ல என்ன தயக்கம் !
16. மிகவும் பிடிக்காத நபர் - கடவுள்! அதை சொல்ல என்ன தயக்கம் !
17. மிகவும் ரசித்த நபர் - ஆளில்லாத ஊரில் தனிமையில் இருக்கும் போது என்னை ! அதை சொல்ல என்ன தயக்கம் !
18. ரசிக்க பிடிக்காத நபர் - என்னை தனிமையில் இருக்க விடாத நீ ! அதை சொல்ல என்ன தயக்கம் !
19. ஊர் சுற்றி பார்க்க வேண்டுமென்றால் என்ற இடத்திற்கு  முதலில் போக விரும்புகின்றாய் - என் இதயத்தில் ! அதை சொல்ல என்ன தயக்கம் !
20. நண்பர்கள் என்றால் உன் மொழியில் ஒரு வரியில் கூறு - ஒரு வரியில் அடக்க முடியாதவர்கள் !அதை சொல்ல என்ன தயக்கம் !

சமர்ப்பணம்

நீ நினைகின்றாயா அவளை நீ முழுதும்
பார்த்து விட்டாய் ஏனெனில் அவள்
தன் உடை உரித்து திறந்த  மேனியாகி விட்டதால்?

அவள் கனவுகள் பற்றி உனக்கு தெரியுமா ?
அவள் இதயத்தை நொறுக்குவது எது என்று தெரியுமா ?

அவளின் சாதுர்யம் பற்றி உனக்கு தெரியுமா ?
அவளின் நீண்ட பயணம் பற்றி ஏதும் அறிவாயா?

அவள் ஏன் அழுவாள் என்று தெரியுமா ?
எந்த விஷயம் அவளை அழ வைக்கும் என்று தெரியுமா ?

அவளின் சிறு குழந்தை பருவம் பற்றி தெரியுமா?
அவள் வாழ்க்கை என்ற புத்தகத்தில்
நீ வந்து போகும் ஏதேனும் ஒரு கதை சொல்லேன் பார்போம் ?

அவள் முகத்தை நீ பார்த்திருக்கலாம் !!
அவளோடு பேசி இருக்கலாம் !!
அவளோடு உரசி இருக்கலாம் !!

ஆனால் அவளை நீ ஒரு புத்தகம் என்று கருதினால் !!
அந்தப் புத்தகத்தை திறக்கக்கூட நீ இன்னும் இல்லை என்பதுதான் உண்மை !

இன்டெக்ஸ் பேஜ் படிப்பதற்குள் உன் ஜென்மம் முடிந்து விடும் !!
புத்தகத்தை முகர்ந்து மட்டும் பார்க்காதே தயவு செய்து படிக்கவும் செய்!!

நிர்மூலம்

சவுதியில் 7 பேர் கற்பழித்த பெண்ணுக்கு 90 கசையடி !
ஏமனில் பெண்ணின் மார்பகங்களை
அறுத்து காம எண்ணம் வராமல் தடுக்க முன்னேற்பாடு !
ஆப்கனிஸ்தானில் கணவனின் மேல் புகார் கொடுத்த மனைவி தான் பரிசுத்தமானவள் என்று நிரூபிக்க தவறியதால் மகன் அப்பா கணவன் என்று குடும்பத்தால் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டாள் !

அடிமை பெண்ணுடன் எப்படி கலவி கொள்ள வேண்டும்
என்று ISIS கட்டுரை வெளியீடு !!
உன் பொண்ண வெளில போகும்
போது காட்டிட்டு போக சொல்லாத !!
அப்புறம் ஏதும் நடந்த அதுக்கு
நான் பொறுப்பு இல்லை என்று
சொல்லும் மகாராஷ்டிரா PM !!
அவ்வளவு  ஏன் நான் இருக்கும்
அமெரிக்காவில் கூட பெண்கள் தனி சம்பளம்
ஆண்களுக்கு தனி மற்றும் அதிகம் !!
ஆணாதிக்கம் என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை !
இந்த சமூகம் பெண் என்று ஒரு வர்க்கத்தை
வரை முறை செய்யவே இல்லை !!
தயவு  செய்து பெண் என்ற பாலை
பிறப்பு  இறப்பு சான்றிதலில்  இருந்து
எடுத்து விட்டு என்ன கொடுமை
வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் !!
 நீங்கள் பெண்ணை கற்பழிக்க வில்லை
ஒரு சமுதாயத்தை உருவாகும்
தாயை நிர்மூலம் செய்கிறீர்கள் !!

தலைப்பு இல்லா கவிதை

அடர்ந்த இருட்டு அதிலும் ஒரு கருஞ் சிகப்பு மேக மூட்டம்
என்னை சுற்றிலும் டம டம வென மேளச்சத்தம் விடாமல் சீராக கேட்க ! புதிதாய் பிறந்த குழந்தையை பூந்துண்டில்
சுற்றி வைத்தாற்போல் ஒரு கத கதப்பு!
நான் பேசி யாருக்கும் கேட்கவில்லை
மற்றவர் பேசுவது கிணற்றில் போட்ட கல்
போல அதிர்வுடன் என் காதை துளைத்தன !
அடிகடி யாரோ விசும்பி அழும் அதிர்வு
என்னை நிமிடத்திற்கு 72 முறை விக்கல் எடுக்க வைத்தது !
ஒன்றுமே புரியவில்லை எங்கிருக்கிறேன் ?
யார் அழுகிறார்கள் ? நான் எதற்கு விக்கல் எடுத்த மாதிரி அதிர வேண்டும் ?
இதெற்கெல்லாம் மேல் என்னை
யாரோ மெலிய கையிற்றால் வேறு கட்டி போட்டிருந்தார்கள் !
என்ன செய்வது எப்படி வெளியேறுவது
வெளிச்சம் எப்போது வரும்?
ஒன்றிற்கும் விடை கிடைக்காமல்
தேமேன்னு உறங்கிபோனேன் !!
சரி கவிதை கடைசியில் தலைப்பை
சொல்லலாமென்று நினைத்தேன்!
இதனை நேரம் என்னவளின் இதய சிறகில்
சிறை பட்டு இருந்தேன்.
இப்போது மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து
படிக்கவும் என்னவென்று புரியும் !! புரிந்ததா ??
பின் குறிப்பு:
கருஞ் சிகப்பு (இரத்தம் )
மேளச்சத்தம் (இதய துடிப்பு )
மெலிய கையிற்றால் (நாடி நரம்பு )
72 முறை விக்கல் (நாடி துடிப்பு )

போதை

நான் நினைக்கிறன் முதலில் சாராயம் கண்டுபிடித்தவன்
ஒரு பெண்ணை முத்தமிட்ட பிறகே
அதன் formula கண்டுபிடித்து இருப்பான் போல
ஏன் தெரியுமா அத்தனை போதை கொடுக்கக் கூடியது வேறு எது??

Sunday, January 10, 2016

மானே தேனே பொன்மானே

மானே தேனே பொன்மானே
எனப் போற்றி பாடியாகிவிட்டது!!

அழகே அமுதே ஆருயிரே
என்றும் வீழ்த்தியாகிவிட்டது !!

மலரே மொட்டே கற்கண்டே
எனவும் தித்திப்பாக கூறியாயிற்று !!

அழகே அபிதகுசலாம்பாள்
என்றும் எள்ளி நகையாடி விட்டது !!

கன்னுகுட்டி செல்ல குட்டி
மான் குட்டி என்று வழிந்தாயிற்று!!

கண் காது மூக்கு வாய் என்று
பார்ட் பார்ட்டாக அலசி புகழ்ந்தாயிற்று!!

எடுக்க எடுக்க திகட்டாத ஒரே சப்ஜெக்ட்
என்னவென்றால் அது பெண்தானோ!!

ஆனால் கவிஞர் கனிமொழி அப்படி
ஒன்னும் ஆண்களை வர்ணித்த மாதிரி தெரியவில்லை!!

எதிர்பால் வினை ஒன்றை ஒன்று  ஈர்க்கும் என்ற
நமது லோக்கல் தத்துவம் ஏனோ பலிக்கவில்லை !!

இங்கு எப்போதும் ஆண்கள் மட்டுமே வழிவது போல்
இருந்தாலும் நமக்கு அது பற்றி கவலை இல்லை!!

மகாராணியே அதை விரும்பும் போது
இந்த சேவகனுக்கு என்ன கவலை!!!

மறுபடியும் ஆரம்பிப்போம் மானே தேனே பொன்மானே என்று!!

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம் (சிரிக்க சிந்திக்க)
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு

வாரம் இன்னும் இரண்டு நாள்கள் கூட இருந்தாலும்!!
இந்த பெண் விழுந்தடித்து வேலைக்கு போவாள் போல!!

சனி கிழமை ஆபீஸ் உண்டோ என்று கேட்டால் இல்லை ஆப் டுட்டி
சண்டே தான் ஆபீஸ் இன்னிக்கு ஜாலி !! ஹையா என்பாள்!!

காலையில் எழுந்து குளிப்பாளா மாட்டாளா தெரியவில்லை!!
ஆனால் நடந்து ஆபீஸ் போகும் போது தெருக்கோடி வரை சந்தன வாசம்!!
கடை கோடி டீ கடை குப்பு சாமி வரை அவள் தரிசனம் கிடைத்தாகி விடும்!!

கிளம்பும் முன் குட் மார்னிங் என்பாள் அப்புறம் சத்தமே இருக்காது!!
நானாக புரிந்து கொள்வேன் குட்டி பெண்ணுக்கு கடினமான வேலை போல என்று!!

சில சமயம் குட் மார்னிங் சொல்லி ஒரு எமொஜி சிரிப்பு வந்தால்
மேனேஜர் லீவ் என்று அர்த்தம்!!

சில சமயம் சுத்தமாக பேசவே மாட்டாள்!!
அன்று கண்டிப்பா ஊருக்கு போக போகின்றாள் அன்று அர்த்தம்!!

கோயம்பேடு இல்லையேல் தாம்பரம் என்று அன்று முழுவதும்
தூணுக்கும் துரும்புக்கும் அலைந்து ஊருக்கு கிளம்பிட்டேன் என்பாள் !!

அப்படியா  சொல்லவே இல்லையே நீ
என்று பேதமையாய் கேட்டால் நீங்க எப்போதும் இப்படி தான்
மறந்து போய்டீங்களா   என்று பழி என்மேல் விழும்!!

திடீரென டிரெயின் மிஸ் பண்ணிட்டேன் பஸ்ல போறேன் என்பாள்!!
என்னடா இவள் வானத்துக்கும் பூமிக்கும் இப்படி தாவுகின்றாலே!! என பரிதபமாய் இருக்கும்!!

ஒரு முறை வித் அவுட் டிராவல்!!

சரி ஊருக்கு போய் ஒழுங்கா இருக்காளா என்று கேட்டால் அதுவும் இல்லை
பாஸ்போர்ட் வாங்கணும், ப்ளௌஸ் வாங்கணும் டிரஸ் வாங்கணும் மறுபடியும் ஒரு அமைதி
கேட்டால் பதில் இருக்காது நானாக தெரிந்து கொள்ள வேண்டும்
மறுபடியும் கால சக்கரம் சுற்றி வந்து விட்டாலென!!

சரி ஒழுங்காக சாப்பிட்டயா  என்று  கேட்டால் பதில் வராது
சாப்பாடு சரி இல்லை என்று நானே புரிந்து கொள்ள வேண்டும்!!

இப்பதான் சாப்பிட்டேன் ஆனா சுமார் தான் என்றால்
அன்று வேறு எதோ வீட்டு பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டும்!!

திடீரென செல்பி போட்டோ வரும் தேவதை போல புரிந்து விடும்
இன்று யாரோ நல்ல சாப்பாடு போட்டு இருங்காங்க என்று
அன்று கண்டிப்பாக கொஞ்சமாவது கூட நேரம் பேசுவாள் கொஞ்சலாக குழைவாள்!!

தூங்க வேண்டாமா நேரம் ஆகி விட்டது என்றால்
ரொம்ப எதார்த்தமாக நாளைக்கு லீவ் பரவாஇல்லை என்பாள்!!

சரிப்பா எத்தனை நாள் நான் இப்படி உன்னை எளிமையாக கையாண்டு
சுவீகரிக்க முடியும் ஒரு நாள் நான் இந்த  இருவழி பாதையில் இருந்து
விலகி போய்டுவேன் என்றால் பிச்சு பிச்சு என்பாள்!!

பலமுறை அவள் காலை நேரத்தில் கண்டிப்பாக
இன்று நாம் மெசேஜ் அனுப்ப கூடாது என்று கங்கணம்
கட்டி கொள்வேன் கடைசியில் ஒரு வார்த்தை வரும் போது
சே போற போ சின்ன பொண்ணு என்று
நானே வெட்கத்தை விட்டு நல்லா சாப்பிடு தூங்கு
வேலைக்கு போ என்று பல் தெரிய வழியனுப்பி வைப்பேன்!!

சரி கடைசியாக எதற்கு இந்த கட்டுரை முன்னுரையும்
இல்லாமல் முடிவுரையும் இல்லாமல்
மொட்ட தாதா குட்டை விழுந்த கதையா!!
இது என்ன உறவு!! இதற்கு பெயர் தான் என்ன??
யார் இவள்!! அப்படி எதுவும் அவளுக்கு நான்
இது வரை ஒன்றும் செய்து விட வில்லை.
எப்புறம் என்ன ஒரு உரிமை என்னிடம்??
இல்லை செய்ய வேண்டும் என ஏதாவது நிர்பந்தமா??
அவள் எதிர் பார்ப்பு தான் என்ன என்னிடம்?
இல்லை நான் எதை எதிர்பார்கிறேன்??

நான் படித்த அத்துணை அர்த்த சாஸ்திரங்களையும்
பிரயோகித்து யோசித்து விட்டேன் தெரிய வில்லை!!
ஒன்று மட்டும் நிச்சயம் சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அதன் படி ஒரு பெண்ணை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டுமானால்
நீ பெண்ணாக மாறிவிடு அதுதான் ஒரே வழி
அவள்  அழுதால் நீ அழு சிரித்தால் நீ சிரி!!
கொஞ்சினால் கொஞ்சு !!
அவள் வேகத்துக்கு ஈடு கொடு இல்லையேல் கொடுப்பது போல் நடி!!
மாற்றி செய்தால் துன்பம் நிச்சயம்!!

தலையணை கண்ணீர்

இந்த கதா பத்திரத்தில் வரும் சம்பவம் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. பெயர்கள் மாற்றபட்டுள்ளது
சியாமளா இதற்கு முன் பின் தெரியாதவள். வேளைக்கு சேர்த்து சில நாளில் அறிமுகம். பெரிய அளவில் அவளை அளவெடுத்துப் பார்த்ததில்லை.

ஆனால் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள். அளவெடுத்தது போல வெகு சீரான கண்கள், மென்மையான புருவம்
தயாராக இருக்கும் அர்ஜுனன் வில் போல!!
தொக்கி நிற்கும் கேள்வி குறி போல!!

கோதுமை நிறம் தோல் இல்லை என்றாலும்
அதில் தங்க துகள் சேர்த்த மாதிரி ஒரு மினுமினுக்கும்
உத்தம சாதிப்பெண் ரகம்

சற்றே அடர்ந்த கூந்தல் அவை முடியும் இடத்தில் சீரான நாசி!!
சற்றே முன் அளவேடுத்தது போல பட்டு ரோஜா நிறத்தில் சிறு உதடுகள்
அவை எந்நேரமும் கவிதையை முனுமுனுப்பதுபோல இருக்கும்!!

சற்றே சிறு இடைவெளியில் அவள் உதடுகள் குளிரில் நடுங்கும் மான் குட்டி போல!!
புல்லில் துளிர்த்த நீர்த்துளி போல சிறு எச்சில் திட்டுக்கள் அங்கும் இங்கும்!!
ஆனால் வெகு சுலபமாக துருத்தி நிற்கும் சிறு நாக்கு அவற்றை உள்ளிழுக்கும் அழகு அவளுக்கே வெளிச்சம்!!
இந்நேரம் அவை சுவர்க்கம் சென்றிருக்கும் கொடுத்து வைத்தவை அவை!!

முடியும் சருக்கத்தில் அளவெடுத்து வைத்தது போல காது மடல்!!
கிள்ள வேண்டும் என தோன்றும்!!!

பெண்ணே தயவு செய்து சிரித்து விடாதே யார் சொன்னது
கவிங்கருக்கு தக்க சன்மானம் தரவேண்டும் என்று???
நீ சிரித்தாலே போதுமே அவை சிதற விட்ட பொற்காசுகள் போல தெறிக்கும்!!

மறந்துவிட்டேன் ஏனெனில் சிரித்தால் மட்டும் தெரியும் பல்வரிசை
ஒருவேளை உன்னுடன் சேர்ந்து உன் பல்வரிசையும் வெட்கப்படுமோ?

அதனாலோ என்னவோ உன் பற்கள் தனது பெண்மையை எப்போதும் வெளிப்படுத்தாதோ?

கொஞ்சம் துணிவாகவே   மேலே வர்ணிக்க தைரியம்   வந்தது!!!
அகன்ற தோள்கள் சடாரென இறங்கும் பின் முதுகுகள் சட்டென பார்க்க மலைகளின் அரசி போல தோன்றும்!!!
சங்கு போன்ற  கழுத்து என பாடிய அதே பல்லவியைப்பாட  தோன்றவில்லை!!!
ஆனால் அவற்றின் மாறாக சந்தன கல்லிலே இழைத்த குழவி போல பளீரென்று முன்கழுத்து நிறம் !!!

தூரத்தில் இருந்து நிலவை பார்க்க அதில் ஒரு கோடு போன்ற  தங்க அணிகலன்!!

அவை கழுத்திற்கும் மலைகளின் அரசிகளுக்கும் இடையே தினமும். படாத பாடு படும்!!!

சரி நிற்க சற்றே அவள் சாமுத்ரிகாலக்ஷனம் பார்க்க போனால் அவள் கண்களில் எந்நேரமும் தொக்கி நிற்கும் சிறு இழை  சோகம் என்னை என்னவோ செய்தது!!!

அதிக கெடுபுடி இல்லை என்றாலும் லெனின் ஆண்ட ரஷ்யாவை போல ஒரு செங்கோல் ஆட்சி புரியும் அப்பா!!!
யாருக்கு உதவுவது என்ற குழப்பத்திலேயே தினமும் கட்சி மாறும் அம்மா
கேட்டால் மட்டுமே பதில் சொல்லும் என இருக்கும் உடன்பிறப்பு !!

யார் தான் எனக்கு? ஐயகோ நான் பெண்ணாய் பிறந்தது மட்டும் தான் என் குற்றமா?

5 முதல் 10 வரை என் தோற்றம் அத்தனை நன்றாக இல்லை என ஒரு குறை!!
10 முதல் 18 வரை ஏதோ பரவாயில்லை எனத்தேற்றி
19 முதல் 21 வரை தேடி எடுத்த முத்து போல் வளர்த்துள்ளேன்!!!

எனக்கு என்னதான் வேண்டும் என யாருமே கேட்பாரில்லை!!
சொல்வதை மதிப்பதும் இல்லை!!!

எனது உலகம் என்பது முடிந்த வரை பத்துக்கு பத்து என்ற ஒரு அறை அது வீட்டிலேயும் சரி!!

இல்லை PG (parental  guidance ரூம்) ஆக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்று தான்!!

தனியாகா அழ வேண்டும் போல தோன்றும் அதுக்கும் கட்டுபாடுகள்..
பெட்டை   பிள்ளைக்கு அழகூட ஒரு அளவு கோலா?

இந்த பையன் வேண்டாம் என சொல்லதொன்றும்!!
மார்க்க வரைபாடுகள் வேண்டாமென்று தடுக்கும்!!

நானா சொன்னேன் வேண்டுமென்று? இல்லை நானா சொன்னேன் வேண்டாமென்று?

ஒரு சில இடங்களில் என்னை சுற்றி வாழும் மனிதர்களே கேள்வியும் பதிலுமாய் இருக்க!! சில சமயம் நான் என்னை வெறுமையாய் நினைத்ததுண்டு!!

உரத்தகுரலில் சொல்லதோன்றும் நான் வெறுமனே ஒன்றும் ஒப்புக்கு சப்பாணி அல்ல!! அது பத்துக்கு பத்து அறை அல்லவே.. அறை தாண்டி போனாலும் வீடு தாண்டி கேட்காது கேட்டாலும் அந்த சமயத்தில் மனிதர்கள் காது கேளாதவரை போல் மாறுவர்!!

இதுவும் கடந்து போகும் என மனதை தேற்றி கொண்டாலும் என்ன நடக்குமோ என ஒரு அதைரியம் எப்போதும் பரபரப்பாக என்னை சுழல வைக்கும்!!

அது சரி தலைப்பிற்கும் நடுவே வரும் வர்ணனைக்கும் என்ன சம்பந்தம்??
ஆண்களின் கதைகள் பலபல ஆனால் சியாமளாவுக்கு பதிலாக ஸ்னேஹா ஆனாலும் சரி இல்லை தமிழரசி ஆனாலும் சரி கதை ஒன்றே..

கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல் மனமோ... எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ... என எங்கோ கிருஷ்ணன் பாட்டு ஒலித்தது மனதினிலே

பலமுறை தலை குப்புறப்படுத்து அழுத நாட்கள் எனக்கும் தலையணைக்கும் மட்டுமே வெளிச்சம்!!

சியாமளா தண்டகம்

ஒரு வரியில் கவிதை
காலையில் எழுந்தவுடன் எனக்கு கவிதை வேண்டும் என்றாள்
கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை!!
பிறகு இதனை நாளும் கண்ணாடியில் என்முகத்தை!
மட்டுமே பார்த்து பார்த்து சலித்து போன எனக்கு
இன்ப அதிர்ச்சியாக ஒரு மின்னல் கொடியிடையாள்
கண்ணாடி முன் ஒயிலாக தன்னையே
படம் வரைந்து காட்டினால்??


என் எழுதுகோல்  கையை விட்டு நழுவி போய்
அவள் காலடியில் தொட்டு விட்டு மெட்டியாகி விட்டது!!
அதில் உள்ள மை அவள் பாதகணுவில் பட்டு மருதனியாகி விட்டது!!
மைக்கும் எழுத்தாணிக்கும் கிடைத்த ஆலிங்கனம் எனக்கு கிடைக்காதா??


ஒரு கவிதை எழுத வேண்டும் உன் இதழ் வரிகளில்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் உன் கண் இமைப்பதற்குள்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் வரையப்படாத
ஓவியத்தின் வண்ணங்களாய் சிதறிகிடந்த அவள் கூந்தலில்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் எழுதினால்
இதழ் தீண்டும் இடம் யாவும் இதழ் ஆகும் அதிசயம் உன் முத்தம்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் எழுத பேனாவும் பேப்பரும் எதற்கு
மையல் கொண்ட உன் கொங்கனி விரல்களும், பரந்த மார்பும் போதாதா!!


இப்படியே நேரம் போனதே தெரியாமல் கனுவுலகில் அதிசயித்து போன என்னை டிரிங் டிரிங் என்று சிணுங்கிய சத்தம் எழுப்பியது பார்த்தால் ஓகே டீல் என்றாள் மறுபடியும் சியாமளா தண்டகம்!!

Saturday, January 9, 2016

கண்ணுக்கு சொந்த காரி

அர்ஜுனனின் கூரிய அம்பை யாரும்  பார்த்திருக்கலாம் !
பலராமனின் கடாயுடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கலாம் !
சீதையின் யாப்பிலக்கணத்தை அறிந்திருக்கலாம் !
பீமனின் தோள் வலிமையை கண்டிருக்கலாம் !
கண்டிலர் விண்டிலர் !
விண்டிலர் கண்டிலர் !
காணீர் இந்த கண்களை கண் இமைக்காமல்!!
சற்றே மிகைபடுதல் இருந்தாலும் பரவாயில்லை
இந்த கண்ணுக்கு சொந்த காரி அதற்கு தகுதிஉடயவள்தான்
அர்ஜுனனின்  அம்பும் தன்னை கொஞ்சம் கோணித்தான் கொள்ளும் இவள் படபடக்கும் இமை பார்த்தால்
மீன்களும் சற்றே அஞ்சுமோ இதைப் பார்த்தால் இவள் விழி ஓரங்களை கண்டு
எது எப்படியோ ஆயிரங்கோடி பிரகாசமான சூரியனை இவள் சற்று நேரம் மறைத்து விட்டால் தன் குளுமையான கண்களால் வாழ்க நீ !!

எல்லை தாண்டிய பயங்கர வாதம்

எல்லை தாண்டிய பயங்கர வாதம்
================================
அத்து  மீறிய என் கைகளை எல்லை தாண்டிய பயங்கர வாதம் என்று சிறை செய்தாய் !!
சரி விழிகளோடு விழிகள் சேர்ந்து ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்! 
சற்றே  இந்தியா  போல ஏமார்ந்தது  சரியென்று சொன்னாய் !!
அமைதிப் பேச்சின் முடிவாக நமது எல்லைகளை வரையறுக்க நமது இதழ்கள் இணைந்து எழுதிக்கொண்டது சமாதான  ஒப்பந்தம் !!
தீயெனச் சுட்டது எனது இதழ்கள் பிறகு தான் தெரிந்து கொண்டேன்! முத்தமிட்டது உன் இதழ்களை அல்ல! அருகினில் இருந்த விளக்கை ! 
கனவு கலைந்தது ! 
மறுபடியும் உன்னை எச்சரிக்கிறேன் உன் 
இதழ்களை மறைத்து புகைப்படம் எடு சுட்டது போதும் எனக்கு ! 

Monday, January 4, 2016

முதல் இரவு

திருமணங்கள் ஆ ன
(1) இரு மனங்கள் சங்கமிக்கும் இடமே
(2) முதல் இரவு  என்பார்கள் !!
எனக்கு இது சற்றே கலவித் தனமாக தோன்று கிறது
இப்படி சொன்னால் என்ன ??
இன்னும் பார்க்காத மனதின் ஆழம் பார்க்க !!
சமூக வெட்கத்தின் பால் இன்னும் பேசிடாத வற்றை பேச !!
மனதிற்கு அப்பால் ஒளித்தவைகளை கண்டுபிடித்திட! !
அபிப்ராய பேதங்கள் என்னும் ஆடை கலைந்து !!
இதுவரை இருந்த நீ நான் என்ற பால் வேறுபாடு போன்ற  வெட்கம் துறந்து!!
நீ ஆகாயம் நான் விண்மீன் என்று  இத்தனை நாள் சொல்லி வந்த  பொய்களை மெய்பித்து!!
இப்போது (1) & (2) யை படிக்கவும்