Friday, March 11, 2016

ஒரு நாள் பயணம்!! இது ஒரு தொடக்கம்!!

இந்த பயணம் ஒரு பொய்யில் ஆரம்பித்து இன்பச்சுற்றுலாவில் முடிந்தது
மெதுவாக தூண்டில் போட ஆரம்பித்தேன்
நீ எங்க இருப்ப?? ஆபீஸ் அட்ரஸ் என்ன??
எத்தன நாள் லீவ்??
டிரஸ் சைஸ் என்ன??
என்ன கலர் பிடிக்கும்??
 இப்படி பலப் பல கேள்விகள்
எண்ணற்ற உரையாடல்கள்
ஒரு வழியாக ஊர் வந்து சேர்த்தேன்!!
அப்படியும் சொல்ல மனமில்லை!!

கொஞ்சமாக ஒரு அதிர்ச்சி கலந்த
ஆர்ச்சர்யம் தர எண்ணினேன்!!

உடனே ஒரு போன் கால் தெரியாத நம்பரில் இருந்து
கொஞ்சம் மிரட்டினேன்!!
ஆசை வார்த்தை காட்டி அசைத்துப்ப் பார்த்தேன்!!

ம்ம்ஹும் ஒன்னும் இணங்க வில்லை
கள்ளத்தனம் போக ஆர்ச்சர்யம் நீக்கினேன்
எங்கு இருக்கிறேன் என்று கூறினேன்
ஆச்சர்யம் மறுமுனையில் சற்றே
கோபமும் கூட இதைத்தானே நான் எதிர் பார்த்தேன்!!

கோவப்பட்டால் தானே சமாதானம்
ஊடல் இருந்தால் தானே கூடல்!!
என்ன ஒரு குள்ள நரித்தனம்
சங்கேத வார்த்தைகள் முற்று பெறாத பேச்சு வார்த்தைகள்!!

இடியாப்ப சிக்களில் கொஞ்ச நேரம் ஹோட்டலில் சாப்பிட நேரம் கிடைத்தது!
 பர்கர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ்!!
இப்படியாக இரண்டு நாட்கள் கழிந்தன!

திடீரென போய் வருகிறேன் எனவும் மறுமுனையில் அமைதி
சிறிது நொடியில் விசும்பல் சற்றே மனதை பிசைந்தது!!
அவளின் வாடிய குரலில் கரைந்து போனேன்
சரி பறக்கும் நேரத்தை சற்று மாற்றினால் என்ன ?
ஜோலி போனால் ?? என்ன செய்வது??
சரி உட்கார வைத்து சோறு போடா மாட்டாளா என்ன என்று ஒரு நம்பிக்கை
குறைந்தது ஒருவேளை ட்ரீட்டாவது கிடைக்காத??
முடிந்தது அத்துடன்.. போ மறுபடியும் சென்னை !!

2 நாள் சுற்றி 3ம் நாள் வந்து சேர்ந்தேன்
வருவதற்குள் அத்துணை கேள்வி..

ட்ரைன் ஏறியாச்சா? உட்கார்ந்தர்ச்சா
படுத்தாச்சா சாப்பிட்டாச்சா?? எத்துனை ஆச்சா

ஒரு வழியாக என் ஊர் வந்தது
உடனே ஒரு பயம் மற்றும் ஆர்வம் தொற்றிக்கொண்டது
ஏதோ இன்டர்நெட்டில் காதலியை பார்த்து முதலில் சந்திக்கும்
காட்டுபுரத்தான் போல
வழி நெடுக ஒரே கேள்வி ஏன் இந்த கூத்து
ஹை பை சொல்லிவிட்டு போய் விட வேண்டியது தானே??
இத்துணை அளவு செய்ய வேண்டுமா அப்படி என்ன முக்கியம்
இப்படி குழப்பம் மிகுந்த நேரத்தில் சரி எங்காவது வெளியே போய் வரலாம் என்று ஒரு கட்டளை(விண்ணப்பம்)

மறுபடியும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.. என்னடா இது சின்ன பொண்ணுக்கு உலகமே தெரியலையே!!!
நாம் ஒழுங்காக இருந்தாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் தொற்றிக் கொண்டது!!
சொல்ல மட்டும் இல்லை
மிடறு விழுங்கி ஒருவழியாகி ஒத்துக் கொண்டேன்
அடுத்த தலைவலி பைக்கில் தான் போக வேண்டும் என்று!!
கிழிந்தது கிருஷ்ணகிரி!!!
சரி சின்னக் கவுண்டர் மாதிரி வாக்கு கொடுத்தாகிவிட்டது!!

மறுபடியும் கழுதைக் கால் முளைத்த மாதிரி முன்னே பின்னே போனால் மானம் கப்பலேறி விடும்!!

சின்ன பொண்ணு நம்மை சில்லறைத்தனமாக நினைத்து விடுவாள்
என்று ஒரு கட்டளை இட்டேன்

என் தெரு தாண்டும் வரை நான் தான் வண்டி ஓட்டுவேன்
ஒரு ஓரப் பார்வை பார்த்தாலே பார்க்கணும்
இட்ஸ் ஓகே என்று பின் தட்டி கொண்டேன்

வண்டியை அவளிடம் கொடுத்து விட்டு நான் வேண்டாத தெய்வம் இல்லை
கடவுளே எமனிடம் வண்டியை கொடுத்து ஜாக்கிரதையாக ஓட்டச்சொன்னால்  எப்படி பொருந்தும்??
 சரி விடு ஊரு வந்து ஊரு விட்டு அடிவாங்கனும் தலை விதி இருந்த யாரால தடுக்க முடியும்!!

நினைத்த நினைப்பு அடங்குவதற்குள் இப்படி நினைத்த நேரத்தில் பூ போல பறக்கும் ஒரு கிளர்ச்சி!!

எடுத்த எடுப்பிலேயே என் பரிட்சையில் இந்தப் பெண் தேறி விட்டால்
என்ன அழகு வண்டி ஓட்டுகையில்!!

உடைகளை அழகாக ஒதுக்கி விட்டு முகத்தில் பார்சி இனப்பெண்பொல முக்காடு இட்டுக்கொண்டு!!

கண் மட்டும் தெரியுமாறு காது மடல் வழியே முடி கோதி விட்டு ரியர் விஊ கண்ணாடி மூலம் அடிக்கடி என்னை ஓரக்கண்னால் பார்த்து என் முகம் வெளிறி விட்டதா என்று ஒரு பார்வை வேறு !!

நேரம் போக போக எனக்கும் ஒரு தைரியம் வந்து அழகாக அமர்ந்து  விட்டேன்
நேரம் போனதும் தெரியவில்லை ஏதோ ஊர்வசி & ரம்பை கூட இராவணன் கடத்திச் சென்ற வானூர்தியில் போன ஒரு அனுபவம் அதுவும் பெண் கூட என்றல் சொல்லவா வேண்டும்??

என் கைகள் வேறு பர பர வென்று சும்மாவே இருக்காது வண்டி ஓட்டும் போது
அவர்களின் அசைவுகளுக்கு ஏற்ற  மாதிரி நானும் வண்டி ஓட்டும்
கற்பனையில் இருப்பேன் அது என் இரத்தத்தில் ஊறினது

ஒரே ஒரு கேட்ட பழக்கம் இடுப்பை சுற்றி தட்டாமாலை
போட்டுக்கொண்டால் தான் எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு
அது மட்டும் ரொம்ப கஷ்டப்ப்பட்டு அடக்கிக்கொண்டேன்!!

பிரயாணம் முடிந்ததும் சொல்லியும் விட்டேன் இது ஒன்று தான் குறை என்று
ஒரு வேலை நினைத்திருப்பாள் அடடா வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யாருக்கு தெரியும்!!

குணசீலம் பெருமாள் ஆனால் அருகில் கமலவல்லி நாச்சியார் இல்லை!!
அந்த குறையை தான் இந்தப் பெண் நீக்கி விட்டாலே??

நல்ல வேலை பெருமாள் குடி கொண்டு கல்லாகி விட்டார்
இல்லையென்றால் போதா குறைக்கு பத்மாவதி + நாச்சியாரோடு
இவளையும் கவர்ந்து கொண்டால் என்னை யார் வீடு கொண்டு சேர்ப்பது
அப்படி எதுவும் நடக்க வில்லை !!

போகும் போது இருந்த ஒரு பதற்றம் திரும்பும் போது இல்லை!!
ராணுவ ரகசியம் மாதிரி ஒவ்வொரு முறையும் யாருக்கோ போனில் அப்டேட் கொடுத்தாள்!!அம்மாவாக இருக்கும் என நினைத்தேன்!!

இங்கு சிறுது நேரம் நிறுத்தி நான் கண்டவைகளை நான் சொல்லியே ஆக வேண்டும்!!
சாலை நெடுக பச்சை பசேலென மரம் கொடி
சிறு ஓடை சாலை நீளத்திற்கு சென்றது தண்ணீர் மட்டும் இல்லை!!
குரங்கு இஞ்சி என்று ஒரு மூலிகை செடி மலையேற்றம் போகும் போது பார்த்ததுண்டு அதன் அற்புதம் மழை இல்லா காலங்களில் நுகர்ந்து பார்த்தால் போதும் தாகமே இருக்காது!!

பிரயாணத்தின் போது எனக்கும் நா வரண்டது
காற்றின் அலைகளில் அவள் முடி அலைந்து சிறிது என் உதட்டில் பட்டது
என்ன ஆச்சர்யம் தாகம் காணாமல் போய் விட்டது!!

ஈரம் எங்கே? அவள் கூந்தலிலா? அல்லது மனத்தின் ஈரமா ?
சில்லென்று காற்று என் முகத்தை கூறாக கிழித்தது
வண்டியின் வேகம் அப்படி!!

சிறு குழந்தையை மார்போடு அணைக்கும் தாய் போல அவள் உருவம் என் உடலை மறைத்து தன்னை காற்றுக்கு பலியாக்கி கொண்டாள்!!

திரும்பி வரும் பொது ஒரு இளநீர் கடை
மனதில் உள்ள இனிமை போதும் கொஞ்சம் நாவிற்கும் இனிப்பூட்டுவோம் எனக் கருதி
இரண்டு இளநீர் குடித்தோம்
ஒரு straw  கொண்டு கண் மூடாமல் குடித்தாள்!!
நினைத்துக் கொண்டேன் நீயே ஒரு இளநீராக இருக்கும் போது எதற்கு இந்த ஏமாற்று வேலை???
உன்னையே இளநீர் என்று பருகி இருக்கலாமோ?? ஹும்ம்ம்!!!

உதட்டில் பட்ட இளநீர் குடுவை + straw  எடுத்து சினிமாவில் வரும் மாதிரி collection பாக்ஸ் ல வெச்சுகலாமோன்னு  என்று நினைத்தேன்!!
ரொம்ப சீப் ஆக இருக்கும் என் விட்டேன்

மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம் சமயபுரம் நோக்கி
இப்போது உண்மையை சொல்லப்போனால்  இது பயணத்தின் பாதையே அல்ல !!

அடடா பயணம் இதனை சிறிதாக முடிந்து விட்டதே என எனக்கும் ஒரு குறை அவளுக்கும் ஒரு ஏக்கம்

என்ன செய்வது சரி விடு வண்டியை சென்னை ரோடு நோக்கி
(இதை படிக்கும் போது கண்டிப்பாக அவள் உதடுகள் பளீரென்று சிரிக்கும்)
உண்மை வலிக்கும் என்பார்கள், நான் சொல்கிறேன் உண்மை இனிக்கும் என்று
சில சமயம் பெண்போல  சிரிக்கும் என்று !!

சற்றே மனதின் ஓரத்தில் ஒரு மின்னல் வந்தது வந்தாகி விட்டது
சமயபுரம் அம்மனை பார்த்து ஒரு கன்னத்தில் போட்டுக்கொண்டால் என்ன?
இந்த முறை மாதிரி எந்த முறையும் entrance  கேட் நோக்கி அலைந்தது இல்லை
பரமபத சொக்கட்டான் மாதிரி சுற்றி சுற்றி வந்தோம்!!

அவளால் சுத்தமாக முடியவில்லை வெயில் சூடு வேறு வேகமாக ஓடி நிழல் தேடிக்கொண்டாள்.. கொஞ்சம் லேசாக எனக்கு கண்களில்  கண்ணீர் பண்ணிக்கத்தான் செய்தது!!

வரை முறைக்கு உள்ளே மட்டுமே என்னால் உதவ முடியும் சினிமா மாதிரி எல்லாம் செய்ய முடியாது (காலில் கால் ஏறி நிற்கும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை )

நிழல் தேடி அங்கே நிற்க சொன்னேன். ஒரு வழியாக தரிசனம் முடிந்தது!!
அடடா என்ன ஒரு நிகழ்வு.. சாமிய பார்த்த வுடன் எங்களுக்கு நெற்றிக்கண் திறந்து விட்டது.

ஒரு சினிமா பார்த்தல் என்ன ?
ஊரு ஜூட் "இறுதி சுற்று" பாவம் ஏற்கனவே பார்த்துவிட்டாள் போலும்
இருந்தாலும் பலிகடா ஆடு போல தலை ஆட்டினால் எனக்காக
உணர்ச்சி கரமான படம், அதே உணர்வு எனக்குள்ளும் !!

படமும் முடிந்தது..

ஒரு கனமான  நேரம் அங்கு நிலவியது அடுத்து என்ன எனும் போது
ஒரு வெறுமை!!

அடடா வீட்டிற்கு போக வேண்டுமே? யாரும் தேடுவார்களோ ?
வேறு எங்கும் சென்றால் என்ன ? இப்படி ஒரு சிந்தனை..

இருந்தாலும் சமுதாய கோட்பாடுகளுக்கு அப்பால் நமது சிந்தனை போக கூடாது!!

இல்லையேல் இதனை சந்தோஷமும் ஒரு நொடியில் ஒரு கேள்வியில் அழிக்கப்பட்டு விடும் !! விடுவேனா!!

சரி நான் வண்டி எடுத்து தருகின்றேன் வீட்டை நோக்கி போவாம் என முடிவெடுத்தோம்!!

இத்தனைக்கு பிறகும் எனக்கு திருப்தியாக இல்லை என்றாள்
அட அசடே சாப்பிடுவது மட்டும் இல்லை "ட்ரீட்" IT COULD BE ANYTHING என்றேன்!!

சொல்லிவிட்டேன் சீக்கிரம் வந்து விடு என்று சொல்லி விட்டாள் உடனே அவளும் சொன்னால்  எப்போது வேண்டுமானாலும் என்று!!

ஒரு நாள் பயணம் இனிதுடன் முடிய போகிறது என்று தான் இதற்கு முடிவு எழுத நினைத்தேன்!!

ஆனால் இது ஒரு தொடக்கம் !!

இப்படி ஒரு பிரயாணம் யாருக்கும் புரியக்கூடாது என்று தான் மெனக்கட்டு எழுதினேன் ஓட்டுபவர்களுக்கும் அதில் அமர்ந்து இருபவர்களுக்கும் மட்டும் புரிந்தால் போதுமானது!!!