Sunday, February 15, 2009

நான்தான் ரொம்ப ஒசத்தி

ஏன் சார் கடல் தாண்டி போனா பிராமணன் என்ற தன்னோட தகுதி போயிடும் அப்படீங்கராலே அது உண்மையா அப்படி பார்த்த அவன் பிராமணன் கிடையாதே நம்ம வழக்க படி !!!
பையனுக்கு ஜாதகம் பார்க்கும் போது மட்டும் ஆயிரம் பொருத்தம் பார்கறச்ச கல்யாணம் ஆனப்ரம் பையன் பாரீன் போன மட்டும் பரவா இல்லையா !!!

அப்ப இந்த கருமத்த எல்லாம் பார்க்க மாட்டாளோ என்னமோ போ இந்த மனுஷாளுக்கு கண்ணுல ஒரு பார்வை புடனில ஒரு பார்வை போல !!

என் மருமகள் டோரோண்டோல பஜ்ஜி சாபிடுரன் என் மருமகன் நியூ ஜெர்சில கக்கூசு போறான் அப்படின்னு சொல்லுற இந்த மானங் கெட்ட பொழப்பை எப்பதான் விட போறாளோ !!

இந்த மனுஷா குளோபல் வார்மிங்க்கிற பேர்ல இவா அடிக்குற லூட்டிய பார்க்க சகிக்கல ஸ்பா ல போய் பாடி மசாஜ் என் சிநேகிதன் ஒருத்தன் கார்க் மசாஜாம் அது என்ன இழவோ ஆனா பய பக்கா ஸ்ரீரங்கத்து ஆச்சார சிரோன்மணி ஆத்த விட்டு போன அடிக்குற லூட்டி இருக்கே பெருமாளே நீ கிருஷ்ணா லீலா பண்றத விட படு மோசம் முதலுக்கே மோசம் !!!

ஜாதி விட்டு ஜாதி பொண்ணு எடுக்காதேடா நம்ம குலம் கோத்திரம் மூத்திரம் எல்லாம் போய்டும்னு சொல்றா சரி ஆனா பய இதுல மட்டும் ஜாதி பார்காம ப்ளூ பிலிம் எல்லாம் நன்னா ஸ்பஷ்டமா பார்க்கின் தப்பில்லையோ வரபோற பொண்ணுக்கு செய்ற துரோகம் இல்லையோ அப்புறம் என்ன கருமம் இதுக்கு எல்லாம் !!
ஒன்னு நம்மாவள போல ஒழுங்கா இருங்கோ இல்ல பூனூல கழட்டி ஆணில மாட்டுங்கோ ரெண்டும் இல்லாம அது எதுக்கு தப்பு பன்றச்ச மட்டும் காதுலயோ இல்ல இடுப்புலயோ மாட்டிண்டு ரெண்டு கட்டான் மாதிரி !!!

Saturday, February 14, 2009

அம்ருதவர்ஷினி

சித்தப்பா சித்தப்பா எப்படி இருக்கேள் சித்தப்பாஎப்ப சித்தப்பா சிங்கப்பூர்ல இருந்து வருவேள்எனக்கு என்ன வாங்கிண்டு வருவேள் ரமண குரு கூட வாங்கிண்டு வருவேல அவன் என்ன அடிச்சுட்டான் சித்தப்பாஅவனுக்கு ஒன்னும் வாங்கிண்டு வராதேள் இதோ பாட்டி கிட்ட தரேன் பேசுங்கோ இப்படி மழலை மொழில பேசுவா வேற யாரும் இல்ல என் அண்ணன் பொண்ணுதான்இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் ரொம்ப அழகா பேசுது இத படிக்குற மக்களே உங்களுக்கு அண்ணா தம்பி அக்கா தங்கை குழந்தைகள் இருந்த நிறைய நேரம் பேசுங்க உங்களுக்கு தேவையான கேள்விக்கு பதில் அவங்க கிட்டதான் கிடைக்கும்

ஸ்ரீரங்கம் குளியல்

காவேரி குளியல் விடிய கார்த்தால சீக்கிரம் சீக்கிரமா எந்திருச்சு சூட ஒரு பில்டர் காப்பி போட்டு குடிச்சுட்டு ஒரு சைக்கிள் இல்ல நடராஜா சர்வீஸ் மூலமாவோ போய் காவேரில படிகட்டுல உட்கார்ந்து நல்ல சுகமா காத்து வாங்கி லேசா கால நனைச்சு ஒரு குளியல போட்ட அடடா அந்த சுகம் வருமா உலகத்துல !!ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தான் அந்த உலகம்.. எத்தன வகையான மனிதர்கள் ஒருமிச்சு ரங்கன நெனசுண்டே குளிக்கற சுகம் வருமா சொல்லுங்கசஷிடிய நோக்க சரவணா பவானா ல ஆரம்பிச்சு விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துல முடிக்கும் போது மனசுல ஒரு நிறைவு வரும் பாருங்க அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது

அ எ ப - பாகம் 5.(லிட்டில் இந்தியா)

எனது பயணம் சிங்கப்பூர்
உண்மையிலேயே மனிதர்கள் தங்கள் உழைப்பை கொட்டி
ஓர் பெரிய சொர்க்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்!!!
தூரத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது சரி அருகில் போய் பார்ப்போம்
என்று புகை வண்டி பிடித்து சென்றேன்!!!
அட ஊர் பேர் லிட்டில் இந்தியா அருமை அருமை
அட எங்கு பார்த்தாலும் நம் மக்கள் நம் தமிழ் மக்கள்
அருமை அருமை!!!
இங்கு வந்த சிறு நாட்கள் ரொம்ப தான் தவித்துப்போய் விட்டேன்
நம் கலாச்சார மக்களை பார்க்க முடிய வில்லையே என்று..
சென்னை ரெங்கநாதன் தெரு எத்தனை அழகாக இருக்கும்
இங்கு பார்க்க முடியவில்லையே என்று..
என் ஆசைக்கு ஒரு தீனி இங்கே லிட்டில் இந்தியா
கொஞ்ச நேரத்தில் நம்முடைய இந்திய உணர்வுக்கு வந்துவிட்டேன்
அங்கும் இங்குமாக நடக்கும் மனிதர்கள்
கார் பஸ் போன்றவற்றின் சத்தம் சிறிது கூட அலட்சியம் செய்யாத
நம் இனத்தவர்கள் அடேங்கப்பா சூப்பர்!!!!!
பிறகு தான் தெரிந்தது இங்கு நாம் ரூல்ஸ் கடைபிடிக்க வேண்டும் என்று !!!!!!
ஏதோ நம்மால் முடிந்த ஒரு உதவி அந்த சொர்க்கத்தில் ஒரு
சிறிய குப்பை தொட்டியை வைக்க முடிந்தது
அந்த துர்பாக்கியம் செரங்கூன் என்றழைக்கப்படும் லிட்டில் இந்தியா தான்!!!!
ஏதோ பாவம் மனிதர்கள் தங்கள் நாட்டை விட்டு இங்கே
கஷ்டபடுவர்களே என்று ஒரு சிறிய பகுதியை இந்திய மக்களுக்கு
ஒதுக்கி இருக்கிறார்கள்!!!!
டிராபிக் சிக்னல் நன்றாக வேலை செய்கின்றது ஆனால்
நம் மக்களுக்கு கண்களில் ஏதோ கோளாறு போல!!!
ஷிப்ரா கிராசிங் ஒழுங்காக இருக்கின்றது ஆனால்
பாவம் நம் மக்களுக்கு மட்டும் கால்களில் ஏதோ கோளாறு போல
நடப்போருக்கான மேடை ஒழுங்காக பராமரிக்கப்பட்டு உள்ளது
ஆனால் நம் மக்களுக்கு சாலையை கண்டுபிடிப்பதில் ஏதோ கஷ்டம் போல
இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் இப்படி ரூல்ஸ் கடைபிடிக்காமல்
இருப்பதில் நமக்கு ஒரு அல்ப சந்தோஷம் தெரிகின்றது அது தான் சந்தோஷம்
அதனால் என்ன பரவாயில்லை இப்படியாக மனதில் உள்ள குப்பைகளை
தெருவில் கொட்டி மகிழ்வோமாக
யாருகாவது வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து
லிட்டில் இந்தியா மட்டும் போகாதீர்கள் !!!!!

அ எ ப(அதனால் என்ன பரவா இல்லை) - பாகம் 4

சிக்கனம் தேவை இக்கணம் - பண வீக்கம்

அரை குறை நிஜார் பேண்டு!!அழுக்கு படிந்த கருப்பு பை !!
10 பேர் போக கூடிய கார்ல தனியா ஒரு office பயணம் எண்ணெய் காட்டி பல நாட்கள் ஆன தலை முடி!!

என்னதான் நடக்கும் என்ற பணக்கார புன்னகை அதிகம் படித்த முன் வழுக்கை நெற்றி!!

5 ரூபாய்க்கு 10 ரூபாய் தூக்கியடிக்கும் தாராளம்வாரம் பொறந்தா பார்ட்டி தடுக்கி விழுந்த டீம் மீட்டிங் சண்டே ரெசார்ட்

யார் சொன்னது இந்தியாவோட பணவீக்கம் ஜாஸ்தியா போச்சுன்னு வாழ்கையை அனுபவிக்க தெரியாத முட்டாள்களின் கருத்து அது!!

வாய் கிழிய 2 Km தொலைவில் கத்தி கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் கதறல்கள் நல்லவேளை AC போட்ட என் ரூமுக்குள் கேட்கவில்லை

யாரோ தொலைவில் திட்டுவது காதில் சாப்ட்வேர் பயல்கலால தான்டா இந்த பிரச்சினையே

நெருங்கும் தூரம் தொலைவில் இல்லை!! தயாராக இருங்கள்!!!

Son of a IT mother and Father

என்கௌண்டர்

ஒரே ரகளை புழுதி பறக்க வாய்ச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது!!!
வார்டு கௌன்சிலர்
இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு
பெரிய நாட்டு மேல அக்கறை உள்ள மாதிரி ஒரு நாள் வராங்க போட்டு தள்ளுறாங்க
மனித உரிமை கமிஷன்
இதை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும் நம்மை அரசாளும் மன்னன் கண்டுக்கவே மாட்டார்
பெண் உரிமை போராளி
பெண்களுக்கு சுய உரிமை பாதுகாப்பே இல்லை
பல பெண்கள் தற்போது விதவைகளாக உள்ளனர்
சமூக நல ஆர்வலர்கள்
ஆமாம் ஆமாம் எங்களை உள்ளவே வரவிடல எல்லாரும் துரத்தி துரத்தி அடிக்குறாங்க கடைசியாக இத்தனை என்கௌண்டர்களை கடுமையாக எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவோம்
இனி ஒரு கொலையை அடியை தீண்டாமையை பொறுக்க முடியாது
இப்படியாக அனைத்து தெருவில் உள்ள பைரவர்களும்(நாய்களும்) தங்களை துரத்தி கொல்லும் மாநகராட்சி ஊழியர்களை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றினர்

ஒரு ரூபா போட்டா மூணு ரூபா

அ எ ப(அதனால் என்ன பரவா இல்லை) - பாகம் 3
( ஒரு ரூபா போட்டா மூணு ரூபா )
மச்சான்.. விஷயம் தெரியுமா நம்ம ஊருல இடுகாடு இருக்குல்ல..
அதுக்கு பக்கத்துல ஒரு பெரிய 10 ஏக்கர்ல
காலி நிலம் அப்ரூவ்ட் பிளாட் விலைக்கு வருதுடா..
IT park வரபோகுதுடா நல்ல காத்தோட்டமா வசதி
யாரும் disturb பண்ண மாட்டாங்க
24 hours தண்ணி வசதி
பஸ் லாரி ஏன் சில சமயம் ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்கும்
சீக்கிரம் சொல்லு உனக்கு தான் salary hike கிடைச்சிருக்கும் இல்ல
சும்மா just வாங்கி போடுடா ஒரே வருஷத்துல double ஆகிடும் !!!!

இப்படி ஒரு பேச்சு புழங்குவதற்கு ஒரு இடம் என்பது போய் ….
போகும் இடமெல்லாம் ஒரு வீடு..
அதனால் என்ன பரவாயில்லை…
மனிதன் நிரந்தரமாக தூங்கும் இடம் கூட விலை போகும்..
அதனால் என்ன பரவாயில்லை…
யார் சொன்னது
மனிதன் இருந்தாலும் ஆயிரம் பொன் போனாலும் ஆயிரம் பொன்
விளை நிலம் விலை நிலம் ஆகின்றன
அன்றாடம் காய்ச்சிகளுக்கோ வாழ்க்கை வெறுப்பை உமிழ்கின்றன
அதனால் என்ன பரவாயில்லை…
பகட்டான சில ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கைக்கு
பல ஆயிரம் கோடி மனிதர்களின் வாழ்க்கை விலை பேசப்படுகின்றன …
அதனால் என்ன பரவாயில்லை…
இப்படியே போனால் வாங்கும் பல ஆயிரம் சில மணி துளிகளில்
தொலையும் அபாயம்…
அதனால் என்ன பரவாயில்லை…

அ எ ப - பாகம் 2

அ எ ப(அதனால் என்ன பரவா இல்லை) - பாகம் 2
( ஒரு நாள் அனுபவம் அப்பார்ட்மென்ட் குடியிருப்பு )

வெத்த குழம்பு முதல் மீன் குழம்பு வரை வாசம்!!!
ஏழை முதல் பணக்காரர் வரை விசனமற்ற வாழ்க்கை!!!

பாரதி கண்ட புது சமுதாயம்!!! யாரோ சொன்னதுபோல் ஒரு சமத்துவபுரம்!!!
வாழ்வதில் மட்டுமே சமுதாயம் பார்க்காத மனித முகங்கள்!!!

பழகுவதற்கு மட்டும் முகம் பார்ப்பது ஏனோ??????
அதனால் என்ன பரவா இல்லை பழகிக்கொள்வோம்!!

கட்டிடங்களுக்குள் மறைத்திருக்கும் தூண்கள் போல!!!
ஒளிந்திருக்கும் மனிதர்களாய் ஒரு வாழ்க்கை பயணம்!!!

17″ அங்குலம்

வழி எங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள் வாயைப் பிளக்கவைக்கும் அதன் தோற்றங்கள் ஆஹா ஓஹோ என்ற பேச்சுக்கள்!!!
மேலிருந்து பார்க்கும் போது அடடா நாம் எத்தனை உயரத்தில் இருக்கிறோம் என்ற ஒரு மாயை!!
எங்கேனும் பச்சையாய் ஏதேனும் தெரிகின்றதா என்றால் ஆஹா ஊரெங்கும் ஒரே வயல் வெளி வாய்கால் குளம்!!!அழகான கட்டிடம் அமைதியான மக்கள்துயரமற்ற வாழ்க்கை!!!
கனவு மெய்ப்பட போகின்றது ஹுர்றேகா ஹுர்றேகா என்று கத்தியபடி ஓடினேன்!!!
17 அங்குலம் மானிடரில் இவை எல்லாம்!!!கணிபொறி முன்னால் இவை அனைத்தும்!!!
கட்டிய வீடு முதல் காதலிக்கும் பெண் வரைஎல்லாமே இப்படி கனவுகளாய் 17 அங்குலத்தில் அடைக்காமல்!!!மெய்யான பிம்பங்களாய் உயிர்த்து வாழ வேண்டுகிறேன்!!! கனவுகள் அற்ற உலகத்திலிருந்து!!!!!

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

அனைவருக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஒரு சமயத்தில் மற்றவரை பற்றி ஒரு பயம் அடடா இவன் என்ன நம்ம விட நன்றாக இருக்கின்றானே என்று…
மந்தாகினி பொழுதில் எழுந்த விடனே ஒரு பரபரப்பு போலியாய் ஒரு சுறுசுறுப்பு

கடனே என்று ஒரு குளியல் ஒரு சாப்பாடு ரசனையே இல்லாமல் ஒரு பஸ் பயணம் இரு பால் மனிதர்கள் புழங்கும் இடத்தில் ஒரு பால் மனிதர்களாய் ஒரு வாழ்க்கை

எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாத தன்னை மட்டுமே கவலை பட்டு வாழும் ஒரு வாழ்க்கை

தேவைக்காக ஒரு கணவன் மனைவி பொழுது போக்காய் சில குழந்தைகள் சில மனிதர்கள்

சுதந்திரம் இல்லா வார்த்தைகள் விடுதலை அற்ற எழுத்துக்கள்
வேலைக்கு சோறு பந்திக்கு ஒரு வகை சமையல் என்று இருந்தும் கூட
அக்கரைக்கு மாட்டுக்கு இக்கரை பச்சையாய் தெரியும் ஒரு இனிய வாழ்க்கை..

வேடிக்கை மனிதர்களாய் நாம்….

அதனால் என்ன பரவாயில்லை!!!

நான்கு ஜூனியர் விகடன் ஒரு எழு எட்டு முறை இரண்டு ஆனந்த விகடன் , படித்தேன் கற்றேன் என்ற முறையில் ஒரு ப்லோக்ஸ் (Blogs) கவிதை அடடா ..இதுவல்லவோ தமிழ் புலமை..
இலக்கியத்தை மறந்து விட்டான் போலும் ப்லோக்ஸ் (Blogs) எழுதுபவர்கள் அதனால் என்ன பரவாயில்லை
கருத்துகளால் வளர்க்கப்படலாம் திணிக்கப் படக்கூடாது..அதனால் என்ன பரவாயில்லை
கற்பனையில் உதித்தது எல்லாம் கவிதை என்றாகி விடுமா அதனால் என்ன பரவாயில்லை
பெயருக்கு முன் கவி என்று சேர்த்து கொள்ள வேண்டியது தான்எந்த கவியும் ஏனென்று கேட்கமாட்டான் அதனால் என்ன பரவாயில்லை…