அனைவருக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஒரு சமயத்தில் மற்றவரை பற்றி ஒரு பயம் அடடா இவன் என்ன நம்ம விட நன்றாக இருக்கின்றானே என்று…
மந்தாகினி பொழுதில் எழுந்த விடனே ஒரு பரபரப்பு போலியாய் ஒரு சுறுசுறுப்பு
கடனே என்று ஒரு குளியல் ஒரு சாப்பாடு ரசனையே இல்லாமல் ஒரு பஸ் பயணம் இரு பால் மனிதர்கள் புழங்கும் இடத்தில் ஒரு பால் மனிதர்களாய் ஒரு வாழ்க்கை
எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாத தன்னை மட்டுமே கவலை பட்டு வாழும் ஒரு வாழ்க்கை
தேவைக்காக ஒரு கணவன் மனைவி பொழுது போக்காய் சில குழந்தைகள் சில மனிதர்கள்
சுதந்திரம் இல்லா வார்த்தைகள் விடுதலை அற்ற எழுத்துக்கள்
வேலைக்கு சோறு பந்திக்கு ஒரு வகை சமையல் என்று இருந்தும் கூட
அக்கரைக்கு மாட்டுக்கு இக்கரை பச்சையாய் தெரியும் ஒரு இனிய வாழ்க்கை..
வேடிக்கை மனிதர்களாய் நாம்….
No comments:
Post a Comment