Saturday, February 14, 2009

அ எ ப - பாகம் 5.(லிட்டில் இந்தியா)

எனது பயணம் சிங்கப்பூர்
உண்மையிலேயே மனிதர்கள் தங்கள் உழைப்பை கொட்டி
ஓர் பெரிய சொர்க்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்!!!
தூரத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது சரி அருகில் போய் பார்ப்போம்
என்று புகை வண்டி பிடித்து சென்றேன்!!!
அட ஊர் பேர் லிட்டில் இந்தியா அருமை அருமை
அட எங்கு பார்த்தாலும் நம் மக்கள் நம் தமிழ் மக்கள்
அருமை அருமை!!!
இங்கு வந்த சிறு நாட்கள் ரொம்ப தான் தவித்துப்போய் விட்டேன்
நம் கலாச்சார மக்களை பார்க்க முடிய வில்லையே என்று..
சென்னை ரெங்கநாதன் தெரு எத்தனை அழகாக இருக்கும்
இங்கு பார்க்க முடியவில்லையே என்று..
என் ஆசைக்கு ஒரு தீனி இங்கே லிட்டில் இந்தியா
கொஞ்ச நேரத்தில் நம்முடைய இந்திய உணர்வுக்கு வந்துவிட்டேன்
அங்கும் இங்குமாக நடக்கும் மனிதர்கள்
கார் பஸ் போன்றவற்றின் சத்தம் சிறிது கூட அலட்சியம் செய்யாத
நம் இனத்தவர்கள் அடேங்கப்பா சூப்பர்!!!!!
பிறகு தான் தெரிந்தது இங்கு நாம் ரூல்ஸ் கடைபிடிக்க வேண்டும் என்று !!!!!!
ஏதோ நம்மால் முடிந்த ஒரு உதவி அந்த சொர்க்கத்தில் ஒரு
சிறிய குப்பை தொட்டியை வைக்க முடிந்தது
அந்த துர்பாக்கியம் செரங்கூன் என்றழைக்கப்படும் லிட்டில் இந்தியா தான்!!!!
ஏதோ பாவம் மனிதர்கள் தங்கள் நாட்டை விட்டு இங்கே
கஷ்டபடுவர்களே என்று ஒரு சிறிய பகுதியை இந்திய மக்களுக்கு
ஒதுக்கி இருக்கிறார்கள்!!!!
டிராபிக் சிக்னல் நன்றாக வேலை செய்கின்றது ஆனால்
நம் மக்களுக்கு கண்களில் ஏதோ கோளாறு போல!!!
ஷிப்ரா கிராசிங் ஒழுங்காக இருக்கின்றது ஆனால்
பாவம் நம் மக்களுக்கு மட்டும் கால்களில் ஏதோ கோளாறு போல
நடப்போருக்கான மேடை ஒழுங்காக பராமரிக்கப்பட்டு உள்ளது
ஆனால் நம் மக்களுக்கு சாலையை கண்டுபிடிப்பதில் ஏதோ கஷ்டம் போல
இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் இப்படி ரூல்ஸ் கடைபிடிக்காமல்
இருப்பதில் நமக்கு ஒரு அல்ப சந்தோஷம் தெரிகின்றது அது தான் சந்தோஷம்
அதனால் என்ன பரவாயில்லை இப்படியாக மனதில் உள்ள குப்பைகளை
தெருவில் கொட்டி மகிழ்வோமாக
யாருகாவது வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து
லிட்டில் இந்தியா மட்டும் போகாதீர்கள் !!!!!

1 comment:

  1. அதுதாங்க நம்மாளுங்க...

    உலகமே மாறினாலும் நாங்க மாறமாட்டோமுங்க

    ReplyDelete