உலகம் மாதம் ஒரு முறை பயணிக்க தொடங்கும் !!
சிறு பிராயம் முதலாக என் அம்மா என்னிடம்
இன்னைக்கு மட்டும் நீ சமையல் பண்ணிடுடா!!
நாளைக்கு அண்ணா மொத்தம் இரண்டு நாட்கள்
லீவ் எடுத்து விடுவாள் ஒன்றுமே புரியாது!!
எப்படியோ தட்டு தடுமாறி சமையல் அறிந்து விவரம் புரிந்த காலத்தில்
எதற்கு இப்படி ஒரு சடங்கு என்று தோன்றும்
யார் மீதும் படாமல் ஒதுங்கி கூனி குறுகி நிழல் படாமல் ஓடுவாள்!!
இப்போது நினைத்தால் என் மீதே எனக்கு வெறுப்பு
6 வயதில் சமையல் கரண்டி எடுத்த பொழுது எனக்கு யாரவது இதை பற்றி சொல்லி இருந்தால்
மீதம் உள்ள இரண்டு நாட்களும் அன்னை கரங்களால் அமுதுண்டு இருப்பேன் பேடிகளின் பேச்சை கேட்காமல்!!!
அந்த இரண்டு நாட்கள் அவள் தன்னை குறுக்கிக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை
எனக்கு இன்று வரை பரிட்சயம்
இதைப் பற்றி பேசும் போது அருவருப்பாகவும்
அவஸ்தையை நேரில் பார்க்கும் போது பரிதாபமாகவும் இருக்கும்
சிறு மூளைக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
அவளுக்கு உன்னுடைய அருவருப்போ பரிதாபமோ தேவை இல்லை
ஏனெனில் இந்த சிகப்பு உனக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம்
இவைதான் பின்னாளைய பிரபஞ்ச தோற்றத்தின் மூலமே
அசடே தெரியாத உனக்கு
அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே கடவுள் என்று பொருள்
இவள் உதிர்க்கும் ஒவ்வொரு உதிரமும் தியாகம் என்பதை உணராத வரை
உன்னால் அவள் வலி உணர முடியாது!
பெண்ணே எனக்கு யோனி பூஜை பற்றி தெரியாது காசியில் இன்றும் நடக்கின்றது !!
ஆனால் உறுதியிட்டு சொல்கிறேன் உன்னுடைய வயிற்று வலியும் உதிரப் போக்கும் எனக்கு என் தாயை தவிர
வேறு எதுவும் நியாபகம் வர விடுவதில்லை !! வாழ்க உனது தியாகம்