Sunday, January 10, 2016

தலையணை கண்ணீர்

இந்த கதா பத்திரத்தில் வரும் சம்பவம் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. பெயர்கள் மாற்றபட்டுள்ளது
சியாமளா இதற்கு முன் பின் தெரியாதவள். வேளைக்கு சேர்த்து சில நாளில் அறிமுகம். பெரிய அளவில் அவளை அளவெடுத்துப் பார்த்ததில்லை.

ஆனால் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள். அளவெடுத்தது போல வெகு சீரான கண்கள், மென்மையான புருவம்
தயாராக இருக்கும் அர்ஜுனன் வில் போல!!
தொக்கி நிற்கும் கேள்வி குறி போல!!

கோதுமை நிறம் தோல் இல்லை என்றாலும்
அதில் தங்க துகள் சேர்த்த மாதிரி ஒரு மினுமினுக்கும்
உத்தம சாதிப்பெண் ரகம்

சற்றே அடர்ந்த கூந்தல் அவை முடியும் இடத்தில் சீரான நாசி!!
சற்றே முன் அளவேடுத்தது போல பட்டு ரோஜா நிறத்தில் சிறு உதடுகள்
அவை எந்நேரமும் கவிதையை முனுமுனுப்பதுபோல இருக்கும்!!

சற்றே சிறு இடைவெளியில் அவள் உதடுகள் குளிரில் நடுங்கும் மான் குட்டி போல!!
புல்லில் துளிர்த்த நீர்த்துளி போல சிறு எச்சில் திட்டுக்கள் அங்கும் இங்கும்!!
ஆனால் வெகு சுலபமாக துருத்தி நிற்கும் சிறு நாக்கு அவற்றை உள்ளிழுக்கும் அழகு அவளுக்கே வெளிச்சம்!!
இந்நேரம் அவை சுவர்க்கம் சென்றிருக்கும் கொடுத்து வைத்தவை அவை!!

முடியும் சருக்கத்தில் அளவெடுத்து வைத்தது போல காது மடல்!!
கிள்ள வேண்டும் என தோன்றும்!!!

பெண்ணே தயவு செய்து சிரித்து விடாதே யார் சொன்னது
கவிங்கருக்கு தக்க சன்மானம் தரவேண்டும் என்று???
நீ சிரித்தாலே போதுமே அவை சிதற விட்ட பொற்காசுகள் போல தெறிக்கும்!!

மறந்துவிட்டேன் ஏனெனில் சிரித்தால் மட்டும் தெரியும் பல்வரிசை
ஒருவேளை உன்னுடன் சேர்ந்து உன் பல்வரிசையும் வெட்கப்படுமோ?

அதனாலோ என்னவோ உன் பற்கள் தனது பெண்மையை எப்போதும் வெளிப்படுத்தாதோ?

கொஞ்சம் துணிவாகவே   மேலே வர்ணிக்க தைரியம்   வந்தது!!!
அகன்ற தோள்கள் சடாரென இறங்கும் பின் முதுகுகள் சட்டென பார்க்க மலைகளின் அரசி போல தோன்றும்!!!
சங்கு போன்ற  கழுத்து என பாடிய அதே பல்லவியைப்பாட  தோன்றவில்லை!!!
ஆனால் அவற்றின் மாறாக சந்தன கல்லிலே இழைத்த குழவி போல பளீரென்று முன்கழுத்து நிறம் !!!

தூரத்தில் இருந்து நிலவை பார்க்க அதில் ஒரு கோடு போன்ற  தங்க அணிகலன்!!

அவை கழுத்திற்கும் மலைகளின் அரசிகளுக்கும் இடையே தினமும். படாத பாடு படும்!!!

சரி நிற்க சற்றே அவள் சாமுத்ரிகாலக்ஷனம் பார்க்க போனால் அவள் கண்களில் எந்நேரமும் தொக்கி நிற்கும் சிறு இழை  சோகம் என்னை என்னவோ செய்தது!!!

அதிக கெடுபுடி இல்லை என்றாலும் லெனின் ஆண்ட ரஷ்யாவை போல ஒரு செங்கோல் ஆட்சி புரியும் அப்பா!!!
யாருக்கு உதவுவது என்ற குழப்பத்திலேயே தினமும் கட்சி மாறும் அம்மா
கேட்டால் மட்டுமே பதில் சொல்லும் என இருக்கும் உடன்பிறப்பு !!

யார் தான் எனக்கு? ஐயகோ நான் பெண்ணாய் பிறந்தது மட்டும் தான் என் குற்றமா?

5 முதல் 10 வரை என் தோற்றம் அத்தனை நன்றாக இல்லை என ஒரு குறை!!
10 முதல் 18 வரை ஏதோ பரவாயில்லை எனத்தேற்றி
19 முதல் 21 வரை தேடி எடுத்த முத்து போல் வளர்த்துள்ளேன்!!!

எனக்கு என்னதான் வேண்டும் என யாருமே கேட்பாரில்லை!!
சொல்வதை மதிப்பதும் இல்லை!!!

எனது உலகம் என்பது முடிந்த வரை பத்துக்கு பத்து என்ற ஒரு அறை அது வீட்டிலேயும் சரி!!

இல்லை PG (parental  guidance ரூம்) ஆக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்று தான்!!

தனியாகா அழ வேண்டும் போல தோன்றும் அதுக்கும் கட்டுபாடுகள்..
பெட்டை   பிள்ளைக்கு அழகூட ஒரு அளவு கோலா?

இந்த பையன் வேண்டாம் என சொல்லதொன்றும்!!
மார்க்க வரைபாடுகள் வேண்டாமென்று தடுக்கும்!!

நானா சொன்னேன் வேண்டுமென்று? இல்லை நானா சொன்னேன் வேண்டாமென்று?

ஒரு சில இடங்களில் என்னை சுற்றி வாழும் மனிதர்களே கேள்வியும் பதிலுமாய் இருக்க!! சில சமயம் நான் என்னை வெறுமையாய் நினைத்ததுண்டு!!

உரத்தகுரலில் சொல்லதோன்றும் நான் வெறுமனே ஒன்றும் ஒப்புக்கு சப்பாணி அல்ல!! அது பத்துக்கு பத்து அறை அல்லவே.. அறை தாண்டி போனாலும் வீடு தாண்டி கேட்காது கேட்டாலும் அந்த சமயத்தில் மனிதர்கள் காது கேளாதவரை போல் மாறுவர்!!

இதுவும் கடந்து போகும் என மனதை தேற்றி கொண்டாலும் என்ன நடக்குமோ என ஒரு அதைரியம் எப்போதும் பரபரப்பாக என்னை சுழல வைக்கும்!!

அது சரி தலைப்பிற்கும் நடுவே வரும் வர்ணனைக்கும் என்ன சம்பந்தம்??
ஆண்களின் கதைகள் பலபல ஆனால் சியாமளாவுக்கு பதிலாக ஸ்னேஹா ஆனாலும் சரி இல்லை தமிழரசி ஆனாலும் சரி கதை ஒன்றே..

கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ
கண்ணனின் மனமும் கல் மனமோ... எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ... என எங்கோ கிருஷ்ணன் பாட்டு ஒலித்தது மனதினிலே

பலமுறை தலை குப்புறப்படுத்து அழுத நாட்கள் எனக்கும் தலையணைக்கும் மட்டுமே வெளிச்சம்!!

No comments:

Post a Comment